Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05.12.2025) | 6 PM Headlines | Thanthi TV

x
  • வரி விவகாரம், கப்பல் போக்குவரத்து, விவசாய உரம் தொடர்பாக இந்தியா ரஷ்யா - இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து....டெல்லி ஹைதராபாத் இல்லத்தில், பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது...
  • இந்தியா - ரஷ்யா உறவு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்...உலகில் பல மாற்றங்கள் நிகழ்ந்தாலும், இந்தியா - ரஷ்யா உறவு வலுவாக உள்ளதாக பிரதமர் மோடி கூறினார்...
  • இந்தியா-ரஷ்யா இடையே ஏற்றுமதி வர்த்தகத்தில் புதிய கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்...இந்தியா-ரஷ்யா நட்பு, துருவ நட்சத்திரம் போல உறுதியாக உள்ளதாகவும் கூறினார்..
  • தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும், ரஷ்யாவும் தோளோடு தோள் நிற்கும் என்று பிரதமர் மோடி கூறினார்..உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தையை வரவேற்பதாகவும் தெரிவித்தார்...
  • டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, பிரதமர் மோடியை நண்பர் என்று குறிப்பிட்டு பேசிய புதின்...
  • 2030 வரை இந்தியா - ரஷ்யா இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு தொடரும் என்றும் கூறினார்....
  • கூடங்குளத்தில் இந்தியாவின் மிகப்பெரிய அணு உலை ரஷ்யா உதவியுடன் கட்டப்பட்டு வருவதாக புதின் தெரிவித்தார்...இந்திய ராணுவத்தை வலுப்படுத்த ரஷ்யா தொடர்ந்து உதவி வருவதாகவும் அவர் கூறினார்...
  • சென்னையில் இருந்து ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரத்திற்கு கடல் வழி திட்டம்...இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று புதின் தெரிவித்தார்...
  • அடுத்த ஆண்டு பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு தலைமை வகிக்கும் இந்தியாவுக்கு ரஷ்யா முழு ஆதரவு அளிக்கும்...
  • இந்தியாவுக்கான எண்ணெய் ஏற்றுமதி தடையின்றி தொடரும் என்றும் புதின் கூறியுள்ளார்...
  • கடந்த ஆண்டு 6.20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் இந்தியா ரஷ்யா இடையே வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக புதின் தெரிவித்தார்..இரு தரப்பு வர்த்தகத்தில் 96 சதவீதம், ரஷ்யாவின் ரூபிள், இந்தியாவின் ரூபாய் மூலம் நடைபெறுவதாகவும் கூறினார்..
  • ரஷ்யாவில் இந்திய திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருவதாக புதின் தெரிவித்தார்...டெல்லியில் நடைபெற்ற இந்தியா - ரஷ்யா இடையேயான வணிக மாநாட்டில் பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்றனர்...
  • பல்வேறு துறைகளில் இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்த விரும்புவதாக புதின் தெரிவித்தார்...

Next Story

மேலும் செய்திகள்