Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02.12.2025) | 6 PM Headlines | Thanthi TV
சென்னைக்கு 60 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் தென்மேற்கு நோக்கி மெதுவாக நகர்கிறது...அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது...காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது...
சேலம், நாமக்கல், திருப்பூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரிக்கு ஆகிய மாவட்டங்களிலும் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டாவது நாளாக மழை தொடர்கிறது...நொளம்பூர், கீழ்ப்பாக்கம், அம்பத்தூர் பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்...
வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது...பயிர் பாதிப்பு கணக்கெடுக்கப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்தகோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்... எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது...
SIR குறித்து விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்...விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் காலக்கெடுவை வலியுறுத்தக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்...
செல்போன்களில் சைபர் பாதுகாப்புக்கான சஞ்சார் சாத்தி APP கட்டாயம் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது...புதிய செல்போன்களில் சஞ்சார் சாத்தி APPஐ ப்ரீ-இன்ஸ்டால் செய்ய வேண்டும் என செல்போன் நிறுவனங்களுக்கு மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது...
காங்கிரஸ் எம்.பி ரேணுகா சவுத்ரி நாடாளுமன்ற வளாகத்திற்கு நாயை அழைத்து வந்த விவகாரம்...நாய்கள்தான் இன்று விவாதிக்கப்படும் முக்கிய விஷயம் எனவும்,
அப்பாவி நாய் என்ன செய்தது எனவும் ராகுல் கேள்வி எழுப்பினார்...
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு ஆபரேஷன் சாகர் பந்து திட்டத்தின்கீழ் சிறப்பு படைகளை இந்தியா அனுப்பியுள்ளது...நிவாரண நடவடிக்கைகளுக்கான தடையற்ற தகவல்தொடர்பை உறுதி செய்யும் வகையில்,மருத்துவம், பொறியியல் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன...
ஆளுநர் மாளிகையின் பெயர்களை தொடர்ந்து புதிதாக அமைக்கப்படும் பிரதமர் அலுவலகத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது...புதிய பிரதமர் அலுவலகத்திற்கு சேவை இல்லம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது...
சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்திலிருந்து புறப்பட்ட மெட்ரோ ரயில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடுவழியில் நின்றது...ரயிலில் சிக்கி தவித்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் சுரங்கப்பாதை வழியே வெளியேற்றப்பட்டனர்...
பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்த தேர்தல் ஆணையத்தை எதிர்த்து பாமக நிறுவனர் ராமதாஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்...டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது...
