Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (24.11.2025)| 6 AM Headlines | ThanthiTV

x

தூத்துக்குடி, ராமநாதபுரம், அரியலூர், கள்ளக்குறிச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இரவில் கனமழை கொட்டித் தீர்த்த‌து...

சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்...


தென்கிழக்கு வங்க கடலில் நாளை மறுநாள் உருவாகும் புயலுக்கு 'சென்யார்' என பெயரிடப்பட உள்ளது...

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...


குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...

புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறையிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...


நெல்லை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த பருவத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது...

தேர்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக தேர்வாணையர் அறிவித்துள்ளார்.....


Next Story

மேலும் செய்திகள்