Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (23.01.2026) | 7 AM Headlines | ThanthiTV

x
  • தமிழகதிற்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்...ஈபிஎஸ், அன்புமணி, ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்...
  • மதுராந்தகத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதை ஒட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது...திருச்சி செல்லும் கன‌ரக வாகனங்கள் ECR வழியாக திண்டிவனம் செல்லவும், சென்னை வரும் கனரக வாகனங்கள் திருவண்ணாமலை வழியாக செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..
  • தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பதிவெண்களுடன் கூடிய பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது...பிப்ரவரி 9ஆம் தேதி செய்முறை தேர்வு தொடங்க உள்ள நிலையில், மாணவர்களுக்கு பதிவெண்கள் முக்கியம் என்பதால், முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளன...
  • தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....கடலோர மாவட்டங்கள், உள் தமிழகத்தின் சில இடங்களில் நாளை மழை தொடர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது...
  • சட்டமன்ற தேர்தலில், விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு...அனைத்து தொகுதிகளிலும் பொதுச்சின்னமாக விசில் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்...

Next Story

மேலும் செய்திகள்