Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22.01.2026) | 6 AM Headlines | ThanthiTV

x
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை
  • ஒரே நாளில் சவரனுக்கு 4 ஆயிரத்து 120 ரூபாய் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது...ஒரு கிராம் தங்கம் 14 ஆயிரத்து 415 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது....சென்னையில் வெள்ளி விலை கிலோவுக்கு ஐந்தாயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது...ஒரு கிராம் வெள்ளி 345 ரூபாய்க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி 3 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது...
  • சில மாதங்களுக்கு முன்னர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய டிடிவி தினகரன் மீண்டும் அதே கூட்டணிக்கு திரும்பியுள்ளார்...அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் அமமுக-வுக்கு 6 முதல் 10 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது...
  • மெரினா கடற்கரையில் கடைகளை குலுக்கல் முறையில் ஒதுக்கும் பணிகளை கண்காணிக்க நீதிபதி என்.பால் வசந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்..கடைகளை அமைப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை சென்னை காவல் ஆணையர் மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது...
  • பால் உற்பத்தி ஊழியர்களுக்கான கருணை ஓய்வூதியம் 4 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது...கருணை குடும்ப ஓய்வூதியம் 2 ஆயிரத்து 250லிருந்து 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது...
  • கேரள மாநிலம் கோழிகோட்டில் இளைஞர் தன்னை பாலியல் ரீதியாக சீண்டியதாக வீடியோ பதிவிட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார்..இளைஞர் தற்கொலை செய்த நிலையில், தலைமறைவாக இருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்...
  • நியூஸிலாந்துவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது...238 என்ற இலக்கை 20 ஓவர்களில் எட்ட முடியாமல் நியுஸிலாந்து அணி போராடி தோல்வியடைந்தது...

Next Story

மேலும் செய்திகள்