Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21.12.2025) | 6 AM Headlines | ThanthiTV
- வருகிற வெள்ளிக்கிழமை முதல் நாடு முழுவதும் 215 கிலோ மீட்டருக்கு மேல் செல்லும் ரயில்களில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. கிலோ மீட்டருக்கு ஒரு பைசா வீதம் கட்டணம் உயர்த்தப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
- கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஏராளமானோர் சொந்த ஊர் செல்லும் நிலையில், ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளது..சென்னையில் இருந்து நெல்லைக்கு அதிகபட்சமாக 4 ஆயிரத்து 500 ரூபாயாகவும், கோவைக்கு 5 ஆயிரம் ரூபாயாகவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது..
- புதிய வாக்காளர்கள், இளைஞர்கள் திமுக-வுக்கு வாக்களிப்பதை மாவட்ட செயலாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என, முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்...எஸ்.ஐ.ஆர். பணியின் போது தவறுதலாக விடுபட்டவர்களின் பெயர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணைக்க நிர்வாகிகள் உதவ வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்...
- வரும் 25ம் தேதி டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..26 மற்றும் 27ஆம் தேதிகளில் கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது....
- ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டையில் வேகத்தடையில் ஏறியபோது கட்டுப்பாட்டை இழந்த இருச்சக்கர வாகனம்...இருச்சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்த 6 வயது சிறுவன் உயிரிழந்தார்...
Next Story
