Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19.01.2026) | 6 AM Headlines | ThanthiTV

x
  • பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு பொதுமக்கள் படையெடுத்துள்ளனர்...ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது..
  • பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் மக்களால், திண்டிவனம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல்...நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன...
  • பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் பரனூர் சுங்கச் சாவடியில் விடிய விடிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது...நள்ளிரவு வரை பரனூர் சுங்கச்சாவடியை சுமார் ஒரு லட்சம் வாகனங்கள் கடந்து சென்றுள்ளன...
  • பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து இன்று அதிகாலை வரை விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை ஒரு லட்சத்து ஐந்தாயிரம் வாகனங்கள் கடந்து சென்றுள்ளன...உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை 24 மணி நேரத்தில் 64 ஆயிரத்து 089 வாகனங்கள் கடந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
  • தொடர் விடுமுறை முடிந்து பொதுமக்கள் சென்னை திரும்பியதால் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் அதிகளவில் பயணிகள் குவிந்தனர்....போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்துள்ள பொதுமக்கள், பல மணி நேரம் காத்திருக்க நேரிட்டதாகவும் கூறியுள்ளனர்..
  • சென்னை திரும்பும் பொதுமக்களால் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது...நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் ஊர்ந்துச் செல்கின்றன...
  • தென் மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்ப தனியார் ஆம்னி பேருந்துகளில், கட்டணம் 3 மடங்கு உயர்ந்துள்ளது...நெல்லையில் இருந்து சென்னைக்கு 4 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..
  • எழுத்தாளர்களை கவுரவிக்கும் வகையில் தலைச்சிறந்த படைப்புகளுக்கு 5 லட்சம் ரூபாய் ரொக்கத்துடன் கூடிய செம்மொழி இலக்கிய விருது வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்...
  • கலை, இலக்கிய விருதுகளில் அரசியல் குறுக்கீடு ஆபத்தானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
  • கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இன்று இரண்டாவது முறையாக தவெக தலைவர் விஜய் நேரில் ஆஜராகிறார்....ஏற்கெனவே 7 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், விஜய்யிடம் பல்வேறு கேள்விகளை எழுப்ப சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது...
  • NDA கூட்டணியில் அம‌முக, தேமுதிக இணைவது குறித்து வரும் 23ஆம் தேதி தெரியவரும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்..பிரதமர் கலந்துகொள்ளும் மாநாட்டில் கூட்டணி தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்