Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17.01.2026) | 6 AM Headlines | ThanthiTV
- உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது...ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்கிறார்...
- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது...ஜல்லிக்கட்டை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட உள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
- பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பொந்துகம்பட்டி அஜித் முதலிடம் பிடித்தார்..17 காளைகளை பிடித்து, முதல் பரிசான காரை தட்டிச்சென்றார் அஜித்....
- 16 காளைகளை பிடித்த பொதும்பு பிரபாகரன் 2வது இடம் பிடித்தார்...அவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது...
- சிறந்த காளையாக மதுரை குலமங்கலத்தை சேர்ந்த ஸ்ரீதரன் என்பவரின் காளை தேர்வு செய்யப்பட்டது...அவருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது...
- பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் உட்பட 37 பேர் காயமடைந்தனர்...6 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...
- பாலமேடு ஜல்லிக்கட்டு நேற்று தாமதமாக காலை 9.30 மணி அளவில் தொடங்கியது...போட்டி முடிய தாமதம் ஆனதால் மின்னொளியில் மாலை 6.45 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெற்றது...
- பொங்கல் பண்டிகை முடிந்து மக்கள் சென்னை திரும்ப ஏதுவாக நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு நாளை மாலை 5 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
- ஹவுரா - கவுஹாத்தி இடையே இயக்கப்படும் இந்தியாவின் முதல் வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்...ஜல்பைகுரியில் இருந்து திருச்சி மற்றும் நாகர்கோவில் இடையே இயக்கப்படும் 2 ரயில்கள் உட்பட 4 புதிய அம்ரித் பாரத் விரைவு ரயில்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்...
- மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில், மொத்தம் உள்ள 2 ஆயிரத்து 868 இடங்களில், 2 ஆயிரத்து 830-க்கும் மேற்பட்ட இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது...பாஜக ஆயிரத்து 400 இடங்களிலும், ஏக்நாத் ஷிண்டே சிவ சேனா 397 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன...காங்கிரஸ் 324 இடங்களிலும், உத்தவ் தாக்கரே சிவச சேனா 153 இடங்களிலும் வெற்றியை பதிவு செய்துள்ளன...
Next Story
