Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16.01.2026) | 6 AM Headlines | ThanthiTV
விறுவிறுப்பாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் வலையங்குளம் பாலமுருகன் முதலிடத்தை பிடித்தார்...22 காளைகளை அடக்கி முதல் பரிசான காரை தட்டிசென்றார் பாலமுருகன்...
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற அனைத்து காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன...காளையர்களுக்கு தங்கக்காசு, டிராக்டர், சைக்கிள், பாத்திரங்கள் என விதவிதமான பரிசுகள் வழங்கப்பட்டது..
சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்...அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்ற வலையங்குளம் பாலமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
ஜனநாயகன் பட சென்சார் விவகாரத்தில் தயாரிப்பு நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வை அணுக அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், நீங்கள் குறிப்பிடும் தேதியில் வழக்கை விசாரிக்க முடியுமா என தயாரிப்பு நிறுவனத்துக்கு கேள்வி எழுப்பியது.
சேலம் மாவட்டம் மேச்சேரியில் மாட்டு வண்டியில் வந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வைத்து கொண்டாடினார்.விழாவில், ஏராளமானோர் பங்கேற்ற வள்ளி கும்மி நிகழ்ச்சியை ஈபிஎஸ் பார்த்து ரசித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் பொங்கல் திருநாளை கொண்டாடினார்...தனது இல்லத்தில் மகள்கள், மருமகன் மற்றும் பேரன்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார்..
