Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15.01.2026) | 6 AM Headlines | ThanthiTV

x
  • உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறும் நிலையில் மதுரை விழக்கோலம் பூண்டுள்ளது...ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசு வெல்லும் மாடுபிடி வீரருக்கு காரும், சிறந்த காளைக்கு டிராக்டரும் பரிசாக வழங்கப்பட உள்ளது...
  • ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்று வழங்க இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து படக்குழு வழக்கு...உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது...
  • சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவை முதலமைச்சர் ஸ்டாலின் பறை இசைத்து தொடங்கி வைத்தார்...சென்னையில் ஜனவரி 18ஆம் தேதி வரை 20 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது...
  • சென்னையில் பகுதிநேர ஆசிரியர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்..ஆசிரியர்​ கண்ணனின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்...
  • நொய்யல் ஆற்றை மீட்டெடுப்பது, தஞ்சை பகுதி மக்களுக்கு கோவை மக்கள் செய்யும் பெரும் பேறாக அமையும்...கோவை வந்த குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நொய்யல் ஆறு தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்...
  • சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர ஜோதி விழா கோலாகலமாக நடைபெற்றது...பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவமாக காட்சி தந்த ஐயப்பனை பக்தர்கள் மனமுருகி வணங்கினர்....மகர ஜோதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒலித்த சரண கோஷம்...பக்தர்களின் சரண கோஷத்தால் அதிர்ந்த சபரிமலை...

Next Story

மேலும் செய்திகள்