Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07.12.2025) | 6 AM Headlines | ThanthiTV
- முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், மதுரையில் இன்று மாபெரும் முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது... 36 ஆயிரத்து 660 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு பெற 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன...
- இண்டிகோ சேவை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன...சென்னையில் இருந்து பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும், பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கும் இன்று சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளன...
- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசி சில இடங்களில், இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது...சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...
- சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக, அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனும், தமிழக தலைமைச் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை மேற்கொண்டார்...விவிபேட், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி, வரும் வியாழக்கிழமை முதல் தொடக்கப்படும் என அறிவித்தார்...
- ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி இரண்டாவது அரையிறுதியில், நடப்பு சாம்பியன் ஜெர்மனியை இந்திய அணி இன்று எதிர்கொள்கிறது...
- சென்னையில் இரவு 8 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது...
Next Story
