Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07.10.2025) | 6 AM Headlines | ThanthiTV
- அக். 20ம் தேதி கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையொட்டி, தமிழகத்தில் 14 ஆயிரத்து 208 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்....
- தீபாவளிக்காக பேருந்துகளில் பயணிக்க 2 லட்சத்துக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்....
- பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 20 சதவீதம் வரை தீபாவளி போனஸ் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்...
- பீகாரில் 2 கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் அறிவித்துள்ளார்....
- தங்கம் விலை ஒரே நாளில் இரு முறை உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்....
- இனி தினமும் இரண்டு வேளை தங்கத்தின் விலை மாறக்கூடும் என நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியுள்ளார்....
- தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
Next Story
