Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04.01.2026) | 6AM Headlines | ThanthiTV

x
  • டாப்ஸ்(TAPS) எனும் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.....10% பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என தெரிவித்துள்ளார்...
  • TAPS ஓய்வூதிய திட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது,.தங்களின் பெரும்பாலான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி இருப்பதால் வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை ரத்து செய்கிறோம் என ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
  • அரையாண்டு விடுமுறை முடிந்து தென் மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் சென்னை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்...செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் சுங்கச்சாவடியில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது..
  • மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் ...புதுக்கோட்டையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரசார நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், 5 ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் பொங்கல் விழாவிலும் பங்கேற்க உள்ளார்..
  • வெனிசுலா நாட்டில் புதிய ஆட்சி அமையும் வரை அமெரிக்காவே நிர்வாகம் செய்யும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்...வெனிசுலா மக்களுக்கு, அமெரிக்க படையால் எந்த பாதிப்பும் இருக்காது என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்...
  • உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்...
  • மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அசுத்தமான குடிநீரை பருகியதால் 10 பேர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்....நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், துயர சம்பவத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்..
  • விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் வெளியான ஆறு மணி நேரத்தில் 5 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது..."திரும்பி போகும் ஐடியாவே இல்லை, I Am Coming" என டிரைலரில் விஜய் பேசும் வசனத்தை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து டிரெண்ட் செய்து வருகின்றனர்...

Next Story

மேலும் செய்திகள்