Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03.01.2026) | 6 AM Headlines | ThanthiTV

x
  • தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது...வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய ‌ சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது...
  • கனமழையால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஊட்டி மலை ரயில் சேவை இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது...தண்டவாளங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது...
  • சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2025ஆம் ஆண்டில் 11.19 கோடி பேர் பயணித்துள்ளனர்...2015ஆம் ஆண்டில் இருந்து, இதுவரை 46.73 கோடி பேர் பயணம் மேற்கொண்டதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது..சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2025ஆம் ஆண்டில் 11.19 கோடி பேர் பயணித்துள்ளனர்...2015ஆம் ஆண்டில் இருந்து, இதுவரை 46.73 கோடி பேர் பயணம் மேற்கொண்டதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது...
  • திருப்பரங்குன்றம் மலையில் மேற்பார்வை பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களை திரும்ப பெற கோரிய வழக்கில், மதுரை காவல் ஆணையர், கோயில் நிர்வாகம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது..திருப்பரங்குன்றம் மலையில் காவல்துறையினர் இருக்க கூடாது என்பது ஏற்கத்தக்கதல்ல என்றும் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து தெரிவித்துள்ளது...
  • டெல்லி பிதோரா கலாச்சார வளாகத்தில் இன்று தொடங்கும் சர்வதேச புத்தர் கண்காட்சி....காலை 11 மணிக்கு பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்...
  • காஷ்மீரில் சாலை விரிவாக்கப் பணியின் போது நிலச்சரிவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.ஸ்ரீநகர்-பாரமுல்லா தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மண்ணைத் தளர்த்தும் பணிகள் நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக மலையில் இருந்து பாறைகள் பெரிய புகை மூட்டத்துடன் சரிந்தன. சம்பவத்தன்று வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனைக் கண்டு வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓடிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்