Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (30.01.2026) | 6 AM Headlines | ThanthiTV
- தைப்பூச திருவிழாவையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது...சென்னையில் இருந்து நெல்லை, தூத்துக்குடிக்கு நாளையும், மறு மார்க்கத்தில் பிப்ரவரி ஒன்றாம் தேதியும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது...
- 2016 முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன...மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன் உள்ளிட்ட திரைப்படங்கள் சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன...கூழாங்கல், ஜெய் பீம், கார்கி ஆகியவையும் சிறந்த படத்திற்கான தமிழக அரசின் விருதை பெறுகின்றன...
- நடிகர்கள் சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி, கார்த்தி, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோருக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது...அதே போல் நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி, மஞ்சு வாரியர், ஜோதிகா ஆகியோர் சிறந்த நடிகைக்கான விருது பெறுகின்றனர்...
- இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சிவகங்கை மாவட்டத்திற்கு செல்கிறார்...28 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2 ஆயிரத்து 559 கோடி மதிப்பீட்டில் 49 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்...
- ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் சேர்க்க எந்த வாய்ப்பும் இல்லை என்று, ஈபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்...என்டிஏ கூட்டணியில் ஓபிஎஸ்-க்கு இடம் உள்ளதா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்தார்...
- பிப்ரவரி ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் மீது 5ஆம் தேதி முதல் விவாதம் நடைபெறுகிறது...விவாதங்களுக்கு 11ஆம் தேதி நிதியமைச்சர் பதிலளிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...
- விமான விபத்தில் அகால மரணமடைந்த மராட்டிய துணை முதல்வர் அஜித் பவாரின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது....பாராமதியில் உள்ள வித்யா பிரதிஸ்டான் மைதானத்தில் பாரம்பரிய சடங்குகளை முடித்து, அஜித் பவாரின் உடல் எரியூட்டப்பட்டது....
Next Story
