Today Headlines | மாலை 6 மணி தலைப்புச்செய்திகள் (25.09.2025) | 6 PM Headlines | ThanthiTV

x

கோவை, நெல்லை, தென்காசி, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு... வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் குறைந்த‌து... ஒரு சவரன் தங்கம் 84 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது...

ரயிலில் இருந்து இலக்கை தாக்கும் ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இதற்காக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்...

உத்தரபிரதேசத்தில் ரஷ்யா உடன் இணைந்து AK-203 ரக துப்பாக்கி உற்பத்தி விரைவில் தொடங்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய ஆயுதப்படையில், வெளிப்புற சார்பு நிலையை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்...

தேர்தலில் தபால் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே 2ம் சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது... தபால் வாக்கு பதிவு அதிகரித்துள்ளதால், தபால் வாக்கு எண்ணிக்கைக்கு கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....

சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது... கல்வி சார்ந்த முக்கிய திட்டங்கள், சாதனைகளை முன்னிலைப்படுத்தி நடைபெறும் விழாவை, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்தார்...

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக எம்.பி பைஜெயந்த் பாண்டாவும், இணை பொறுப்பாளராக மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மொஹோலும் நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்கும் மேற்குவங்க மாநிலத்தின் பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்...

பீகார் மாநிலத்திற்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலத்திற்கு பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் சி ஆர் பாட்டில் மற்றும் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோர் துணை பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அன்புமணி தரப்பு பா.ம.க எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை செயலாளரை சந்தித்தனர்... பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே. மணி, கொறடா அருள் ஆகியோரை மாற்ற வலியுறுத்தி மனு வழங்கினார்கள்..

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், வரும் 27ஆம் தேதி நாமக்கல்லில் பிரசாரம் செய்ய காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது... நாமக்கல் கே.எஸ்.தியேட்டர் அருகே நாளை மறுநாள் மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்....

மதுரையில், தனுஷின் இட்லிகடை பட புரமோஷன் நிகழ்ச்சியில் ஆபத்தான முறையில் பேனர் வைக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.. நிகழ்ச்சியில் நடிகர்கள் தனுஷ், பார்த்திபன், அருண் விஜய் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்ற நிலையில், தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்...

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி பரஸ்பரம் பிரிவதாக விவாகரத்து கோரிய வழக்கில், செப்டம்பர் 30ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என, குடும்ப நல நீதிமன்றம் அறிவித்துள்ளது. குழந்தையை சைந்தவி கவனித்து கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என நீதிபதி முன்பு ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார்.

நெல்லையில் இரு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல், தனிப்பட்ட வாக்குவாதத்தின் தொடர்ச்சியாக நிகழ்ந்தது என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது... மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் இருசமூகங்களுக்கு இடையேயான மோதல் அல்ல எனவும் காவல்துறை கூறியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்