Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06.10.2025) | 6 PM Headlines | ThanthiTV

பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 20 சதவீதம் வரை தீபாவளி போனஸ் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்... C மற்றும் D பிரிவு தொழிலாளர்களுக்கு மிகை ஊதியம், கருணை தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது...

தீபாவளிக்காக பேருந்துகளில் பயணிக்க 2 லட்சத்துக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.... பயணிகள் சேவைக்காக 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை திறந்திருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்....

பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 20 சதவீதம் வரை தீபாவளி போனஸ் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்... C மற்றும் D பிரிவு தொழிலாளர்களுக்கு மிகை ஊதியம், கருணை தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது...

பீகாரில் 2 கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் அறிவித்துள்ளார்.... முதற்கட்டமாக நவம்பர் 6ம் தேதியும், 2ம் கட்டமாக நவம்பர் 11ம் தேதியும் தேர்தல் நடைபெறவுள்ளது....வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ம் தேதி நடைபெறவுள்ளது....

தங்கம் விலை ஒரே நாளில் இரு முறை உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.... காலையில் சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்த நிலையில் மாலையில் சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 89 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது....

இனி தினமும் இரண்டு வேளை தங்கத்தின் விலை மாறக்கூடும் என நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியுள்ளார்.... முன்பு பணம் செலுத்தினால் அரை மணி நேரத்திற்குள் தங்கக் கட்டிகள் கிடைக்கும் என்றும், ஆனால் தற்போது ஒரு வாரம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.....

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.... நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயை வழக்கறிஞர் ஒருவர் தாக்க முயன்றதால் உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது... சனாதனம் அவமதிப்பை ஏற்க முடியாது என கூறி தாக்க முயற்சித்த நிலையில், வழக்கறிஞரை பாதுகாவலர்கள் வெளியேற்றினர்...

தன் மீது தாக்குதல் நடத்த முயன்ற நபரை கண்டுகொள்ளாமல் விடுமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கேட்டுகொண்டுள்ளார்.... இதுபோன்றவற்றால் தான் பாதிக்கப்பட மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்...

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.... தலைமை நீதிபதி திரு. பி. ஆர். கவாய்க்கு எதிராக நடத்தப்பட்ட வெட்கக்கேடான செயல், நமது ஜனநாயகத்தின் மிக உயர்ந்த நீதித்துறை அலுவலகத்தின் மீதான தாக்குதல் என அவர் கூறியுள்ளார்....

ஜெயின்ட் வீல் இயக்குவது தொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது..... நிரந்தர ஜெயின்ட் வீல்களை இயக்க சுற்றுலாத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்றும், தற்காலிக ஜெயின்ட் வீல்களை அமைக்க சம்பந்தபட்ட துறைகளிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது....

X

Thanthi TV
www.thanthitv.com