Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (14.07.2025) | 4 PM Headlines | Thanthi TV
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்னும் சற்று நேரத்தில் பூமிக்கு புறப்படுகிறார் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா...
கலிபோர்னியா கடற்பகுதியில் நாளை விண்கலத்தை தரையிறக்க நாசா திட்டம்...
கோவா, ஹரியானா மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு....
லடாக் யூனியன் பிரதேசத்திற்கும் புதிய துணை நிலை ஆளுநர் நியமனம்....
திருவள்ளூரில் டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்துக்கு தண்டவாள விரிசலே காரணம் என மாவட்ட ஆட்சியர் தகவல்...
தீ விபத்து தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ள உயர் மட்டக்குழு...
தான் கட்சியில் இருக்கிறேனா என்பதை மதிமுக தான் முடிவு செய்ய வேண்டும் என தந்தி டிவிக்கு மல்லை சத்யா பிரத்யேக நேர்காணல்....
தன்னை ஸ்லீப்பர் செல் என்று சொல்பவர் ஒரு வலதுசாரியின் ஸ்லீப்பர் செல் என்றும் பேச்சு...
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்...
பெங்களூருவில் வசித்து வந்த நிலையில், வயது மூப்பு காரணமாக தனது 87வது வயதில் மறைவு...
அதிமுக கூட்டணி வலிமையாக உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி...
தங்கள் கூட்டணி குறித்து உதயநிதி கவலைப்பட வேண்டாம் எனவும் பதிலடி...
