Today Headlines | இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (13.06.2025) | 11PM Headlines | ThanthiTV

x

அகமதாபாத்தில் விபத்திற்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் இடிபாடுகளில் இருந்து DVR எனப்படும் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் மீட்பு...

தடயவியல் ஆய்வு நடத்தப்படும் எனவும் குஜராத் காவல்துறை தகவல்...

அகமதாபாத்தில் விமானம் விபத்துக்குள்ளான போது 30 நிமிடம் அருகில் நெருங்க முடியவில்லை என மீட்பு பணியில் ஈடுபட்ட தர்மேந்திரா பரபரப்பு பேட்டி...

விபத்தில் உயிர் தப்பியவர் சீட்டில் இருந்து விழுந்திருக்கக் கூடும் என்றும், அவரை கடவுள் தான் காப்பாற்றி இருப்பார் என்றும் நெகிழ்ச்சி...


விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் நிலை குறித்து, அதே விமானத்தில் 2 மணிநேரம் முன்பு பயணித்த இளைஞர் பரபரப்பு புகார்...

விமானம் புறப்படும் முன் ஏசி சரியாக வேலை செய்யவில்லை என்றும், விமானத்தின் FLAPS மேலும் கீழும் நகர்வதை கவனித்ததாக குற்றச்சாட்டு...


கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு மறுப்பு...

கடன் தள்ளுபடி தொடர்பான பரிந்துரைகளை வழங்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் கேரள உயர்நீதிமன்றத்தில் விளக்கம்...


'தக் லைஃப்" திரைப்படத்தை கர்நாடகத்தில் திரையிட விதித்த தடையை எதிர்த்து ரிட் மனு...

கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது உச்சநீதிமன்றம்...


சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு 1,560 ரூபாய் உயர்வு...

ஒரு சவரன் தங்கம் 74 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை


Next Story

மேலும் செய்திகள்