1 மணி தலைப்புச் செய்திகள் (29-08-2025) | 1PM Headlines | Thanthi TV

x

நெல்லுக்கான ஆதார விலையை 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது... சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு 131 ரூபாயும், சன்ன ரகத்துக்கு 156 ரூபாயும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது...

இந்தியாவிற்கு வந்து உற்பத்தி செய்யுங்கள் என, ஜப்பான் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்... ஜப்பான் தொழில்நுட்பமும், இந்தியாவின் திறமையும் இணைந்து புதிய தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்...

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் படம் திறக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்... தொழில் முதலீடுகளை ஈர்க்க நாளை முதல் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இதனை அறிவித்துள்ளார்...

பீகாரில் நடைபெறும் வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த குளறுபடி தமிழகத்திலும் அரங்கேறக் கூடாது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்... என்.ஆர். இளங்கோவன் மகள் திருமண விழாவில் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்...

அதிமுக கட்சி விதிகள் திருத்தத்தை எதிர்த்து வழக்கு தொடர தனி நீதிபதி அளித்த அனுமதியை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது...அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மேல் முறையீட்டை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது...

2026 தேர்தலில் விஜய் தனித்து நிற்கும் போது அது தாக்கத்தை ஏற்படுத்தும்... தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்...

காவல்துறை நிர்வாகப் பிரிவு டிஜிபி வெங்கட்ராமன், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார்...டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு பெறும் நிலையில், சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்தது... ஒரு சவரன் தங்கம் 75 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது...

நடிகர் விஷால் - நடிகை சாய் தன்ஷிகாவின் திருமண நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் நடைபெற்று முடிந்தது... விஷால் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், பெற்றோர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக அறிவித்துள்ளார்...

சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்... தன்னை திருமணம் செய்வதாக கூறி, கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிஸில்டா குற்றம்சாட்டியுள்ளார்...

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இருதரப்பு மாணவர்கள் மோதிக்கொண்டதால் பரபரப்பு... ஒரு மாணவரின் மண்டை உடைக்கப்பட்ட நிலையில், இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்