காலை 9 மணி தலைப்பு செய்திகள் (21-08-2025) | ThanthiTV
மதுரையில் இன்று நடைபெறுகிறது தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு... மாலை 3 மணிக்கு மாநாடு தொடங்கும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குவிந்துள்ள தொண்டர்கள்...
பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்ய புதிய சட்டம்... மக்களவையில் மசோதா அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மசோதா நகலை அமித்ஷா மீது வீசி எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சிகள்...
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 130வது அரசியலமைப்பு திருத்த மசோதாவுக்கு முதல்வர் ஸ்டாலின், மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் எதிர்ப்பு.. இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றும் முயற்சிக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் அழைப்பு...
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 130 வது அரசியல் சாசன சட்ட திருத்த மசோதா... நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்காக அனுப்பிவைப்பு....
பா.ஜ.க கூட்டணி சார்பில் குடியரசு துணை தலைவர் தேர்தலில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்... பிரதமர் மோடி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார் சி.பி.ராதாகிருஷ்ணன்...
ஆளுநர்கள் போஸ்ட்மேன் அல்ல... மத்திய அரசின் பிரதிநிதி.... என மசோதா ஒப்புதலுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்.... அரசியல் சாசன சிற்பிகள் கனவு கண்டதைப்போன்ற இணக்கம் ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே உள்ளதா? என உச்சநீதிமன்றம் கேள்வி....
அணு ஆயுதங்களை ஏந்தி கொண்டு 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்குச் சென்று தாக்கும் திறன் கொண்ட 'அக்னி 5' ஏவுகணை... சோதனை வெற்றி பெற்றதாக இந்திய ராணுவ அமைச்சகம் அறிவிப்பு...
ஜி.எஸ்.டி-இல் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொலைநோக்குப் பார்வையுடன் உள்ளது... ஜிஎஸ்டி கவுன்சிலால் அமைக்கப்பட்ட குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு...
அரசு முறைப் பயணமாக ரஷ்யா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்... ரஷ்ய துணைப் பிரதமர் டெனிஸ் மன்டுரோவ் உடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை....
ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் ரோகித், கோலி பெயர் திடீரென நீக்கப்பட்டதால் சலசலப்பு... ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த பின்னர் பெயர் சேர்க்கப்பட்ட நிலையில் தொழில்நுட்பக் கோளாறு என ஐசிசி விளக்கம்...
சென்னையில் நாய்களை பொது இடங்களில் முகமூடி இல்லாமல் அழைத்துச் சென்றால் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை.... தடுப்பூசி செலுத்திய நாய்களை மட்டுமே பொது இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் உத்தரவு....
