காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (18.09.2025) ThanthiTV
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது... ஒரு சவரன் தங்கம் 81 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது...
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை... சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்புடன் 5க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடைபெறுகிறது...
வைகை அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரத்து 130 கனஅடி நீரை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்... மதுரை உள்பட 5 மாவட்டங்களில் 1.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்..
மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது... சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க இரண்டாவது நாளாக தடை தொடர்கிறது...
சமூக நீதிக்கு விரோதியான தி.மு.க-விடம் பதற்றம் தெரிவதாக பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்... 2026ஆம் ஆண்டு ஆட்சியில் தொடர விடமாட்டோம் என சபதம் விடுத்தார்.
சென்னையில் 50 ஆயிரத்து 823 தெருநாய்கள், வளர்ப்பு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது... வருங்காலங்களில் தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது...
கேரளாவில் கரடுமுரடான மலைப்பாதையில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி பயணம் மேற்கொண்டார்... பழங்குடியின சமூக மக்களை நேரில் சந்தித்து பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்...
பாகிஸ்தான் மீது யார் தாக்குதல் நடத்தினாலும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என சவுதி அரசு எச்சரித்துள்ளது... பாகிஸ்தான் - சவுதி அரேபியா இடையே பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அதிரடி அறிவிப்பு...
தேச பாதுகாப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய தாக்கங்கள் குறித்து இந்தியா ஆய்வு செய்து வருகிறது.... சவுதி-பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது....
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வரக் கோரி ஜெருசலேம் நகரில் இஸ்ரேலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.... பணயக் கைதிகளை மீட்கக்கோரி, டிரம்ஸ்களை அடித்து அவர்கள் கோஷம் எழுப்பினர்....
இங்கிலாந்து வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக லண்டனில் ஏராளமானோர் பேரணியில் ஈடுபட்டனர்..... டிரம்ப்பின் அரசியல் கொள்கைகளை எதிர்த்து இந்த பேரணியை நடத்தியதாக அதில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்....
