மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (15.07.2025) | Thanthi TV
- சிதம்பரம் அருகே பேட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலை...திறந்துவைத்து மரியாதை செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்...
- தூத்துக்குடியை சேர்ந்த இளைஞர் சேலத்தில் வெட்டிப் படுகொலை...காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்த நிலையில், 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்...
- காவல்துறை விசாரணையின்போது திருப்புவனம் அஜித்குமார் உயிரிழந்தது தொடர்பான வழக்கு...கைதான 5 போலீசாருக்கும் ஜூலை 30 வரை காவல் நீட்டிப்பு...
- வேட்டுவம் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்த சம்பவம்...கிராஷ் காட்சியை எடுக்கும் முன்பு செய்யும் தெளிவான திட்டமிடலை தவறாமல் பின்பற்றியதாக, இயக்குநர் பா.ரஞ்சித் விளக்கம்...
- தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான புதிய கட்டணம் வெளியீடு...என்ஆர்ஐ ஒதுக்கீடு கட்டணம் 30 லட்சம் ரூபாயாக நிர்ணயம்...
- குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி...
- திருவள்ளூர் டீசல் டேங்கர் ரயில் தீ விபத்து தொடர்பாக விசாரணையை தொடங்கியது ரயில்வே துறை...
- கர்நாடக மாநிலம், மல்லேஸ்வரம் வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் நடிகை சரோஜா தேவியின் உடல்...
- பெங்களூருவில் மறைந்த நடிகை சரோஜா தேவி உடலுக்கு கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா அஞ்சலி...
- காமராஜர் பிறந்தநாளை ஒட்டி சிதம்பரம் அரசு பள்ளியில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை...
- இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் முன்னணியில்இருந்தவர் காமராஜர்...காமராஜரின் சிந்தனைகளும், சமூக நீதி குறித்த உறுதிப்பாடும் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் என பிரதமர் மோடி பதிவு...
- சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பூமிக்கு புறப்பட்டார் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா...
- அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதி விவசாயிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் கலந்துரையாடல்...
- 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் நடைபெறும் இடத்தில் மருத்துவ முகாம்களும் நடைபெறும்...தகுதிவாய்ந்த விடுபட்ட பெண்களுக்கு, மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு...
- தமிழகம் ஓரணியில் உள்ள நிலையில், டெல்லி அணியின் காவி திட்டங்கள் நிறைவேறாது...சிதம்பரத்தில் முன்னாள் எம்பி இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கம் திறப்பு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டம்...
Next Story
