Today Headlines | மதியம் 12 மணி தலைப்புச் செய்திகள் (04.12.2025) |12 PM Headlines | ThanthiTV

x

சென்னையில் 4 நாட்களுக்கு பிறகு வெயில் கொளுத்தியது...சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில், வெயிலுக்கு பிறகு மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு காரணமாக இன்று காலை, மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது....பூஜை பொருள்கள் கடை மற்றும் உணவகங்கள் மட்டும் வழக்கம்போல் செயல்படுகின்றன...

திருவண்ணாமலையில் கிரிவலம் முடிந்து தங்களது ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது...இருக்கைகளை பிடிக்க போட்டிப்போட்டுக்கொண்டு ரயிலில் ஏறினர்...

பாமகவில் அன்புமணியின் தலைமையை எதிர்த்து, ராமதாஸ் தரப்பு தொடர்ந்த வழக்கு...இரு தரப்புக்கும் மாம்பழம் சின்னம் ஒதுக்க முடியாது என, டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது...

இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா புறப்பட்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இன்று மாலை 6.35 மணிக்கு டெல்லி வருகிறார்...பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து, நாளை காலை 11.50 மணிக்கு பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்...அதிநவீன எஸ்-500 ஏவுகணை அமைப்பை இந்தியாவுடன் இணைந்து தயாரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது...



Next Story

மேலும் செய்திகள்