Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (17.09.2025) | 11 AM Headlines | ThanthiTV

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர்

ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்...

நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுள் கிடைக்க வாழ்த்துவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்...

கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்க ஆசையாக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்...

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து கூறினார்...

தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது...

த.வெ.க-வின் விண்ணப்பங்களை பாரபட்சமன்றி பரிசீலிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என, மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது..

சரஸ்வதி பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது...

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது...

X

Thanthi TV
www.thanthitv.com