காலை 11மணி தலைப்புச் செய்திகள் (01.08.2025) ThanthiTV

x

நாடு முழுவதும் அமலுக்கு வந்த யுபிஐ பண பரிவர்த்தனைக்கான புதிய விதிமுறை.... இனி ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 50 முறை மட்டுமே பேலன்ஸை சரிபார்க்க முடியும்...

தமிழகத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம் நாளை தொடக்கம்... மாநில முழுவதும் ஆயிரத்து 256 முகாம்கள் அமைக்கப்படும் என அரசின் செய்தி தொடர்பாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி..

முதலமைச்சர் ஸ்டாலின் உடன் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ சந்திப்பு... உடல்நிலை குறித்து முதல்வரிடம் நலம் விசாரித்தார் வைகோ...

ஆம்னி மற்றும் மாவட்டங்களில் இயக்கப்படும் தனியார் பேருந்து கட்டணம் உயர்வா?... கட்டண விவரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்...

19 கிலோ வணிக எல்.பி.ஜி எரிவாயு சிலிண்டரின் விலை 34 ரூபாய் 50 காசுகள் குறைப்பு....வீட்டு உபயோக சிலிண்டர்களின்

விலையில் எந்த மாற்றமும் இல்லை......


ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக சரிவு... 10 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்கவும் சுற்றுலா பயணிகள் பார்வையிடவும் அனுமதி

கடலூர் கொள்ளிடம் ஆற்றில் 95 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு...இரு கரைகளை தொட்டப்படி பாய்ந்தோடும் காவிரியால் விவசாயிகள் மகிழ்ச்சி...

ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்கும் மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையம்...முதற்கட்டமாக நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை...

17 ஆயிரம் கோடி கடன் மோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் வருகிற 5ஆம் தேதி டெல்லி தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு...

நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்.... மக்களவை, மாநிலங்களவையில் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தல்...

சென்னையில் இன்று முதல் CMRL மெட்ரோ ரயில் பயண அட்டைகளை பயன்படுத்த முடியாது.... தேசிய பொது போக்குவரத்து அட்டை மட்டுமே செல்லும் என அறிவிப்பு....


Next Story

மேலும் செய்திகள்