Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (16.01.2026) | 11 PM Headlines | ThanthiTV
- உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது...துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டு போட்டியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்...
- திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் 4 வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்...வறியோர் எளியோர் வாழ்வுயர மனிதநேயத் திட்டங்கள், இளைய சமூகத்தின் அறிவாற்றலை வளர்க்கும் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்...
- சாகித்ய அகாடமி தன்னாட்சி அமைப்பாக செயல்பட வேண்டும் என கவிஞர் வைரமுத்து வலியுறுத்தியுள்ளார்.இன்னும் விருது குறித்து அறிவிக்கப்படாதது படைப்பாளி சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் அவர் கூறியுள்ளார்.
- மாட்டுப் பொங்கலை முன்னிட்டு திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது...850 காளைகள், 600 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை, காளையர்கள் அடக்கி வருகின்றனர்...
- மாட்டுப் பொங்கலையொட்டி கோடியக்கரை கடற்கரையில் அசைவ பிரியர்கள் மீன் வாங்க குவிந்தனர்...காலா, ஷீலா, திருக்கை, நண்டு என வகைவகையாக வாங்கிச் சென்ற நிலையில், மீன்களுக்கு நல்ல விலை கிடைத்திருப்பதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்...
- கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு மாறாது என வெள்ளை மாளிகை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது...கிரீன்லாந்தில் ஐரோப்பியப் படைகள் நிலை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது...
Next Story
