Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (06.12.2025)| 11 AM Headlines | ThanthiTV
நடிகர் பாலகிருஷ்ணாவின் அகண்டா 2 திரைப்படத்தை வெளியிட, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது... 27 கோடி ரூபாய் பண பிரச்சினை தொடர்பான வழக்கை விசாரணைக்கு பட்டியலிடும் வரை படத்தை வெளியிட கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது...
புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு - எச்சரிக்கை. புழல் ஏரியில் இருந்து 500 கன அடி உபரிநீர் திறக்கப்படுகிறது... கால்வாய் ஓரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது...புழல் ஏரியில் நீர்இருப்பு - 3,190 மில்லியன் கனஅடி
திருப்பரங்குன்றம் மலை மீது ஏற 4வது நாளாக அனுமதி மறுப்பு. திருப்பரங்குன்றம் மலை மீது ஏற 4வது நாளாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது...பாதுகாப்பு பணியில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்...
சென்னையில் மீண்டும் இயங்கத் தொடங்கிய இண்டிகோ விமானங்கள். சென்னை விமானநிலையத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கின... டெல்லியிலும் பகுதி அளவு விமானங்கள் இயக்கப்படும் நிலையில், முழுமையான சேவை தொடங்க இன்னும் சில நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது...
அம்பேத்கர் நினைவு தினம் - நாடாளுமன்றத்தில் தலைவர்கள் மரியாதை. அம்பேத்கர் நினைவு தினத்தை ஒட்டி, நாடாளுமன்றத்தில் அம்பேத்கரின் படத்திற்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்... குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்...
