Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (08.12.2025) | 11 AM Headlines | ThanthiTV

x

சென்னை விமான நிலையத்தில் 7வது நாளாக 71 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன... 38 விமானங்களின் புறப்பாடு, 33 விமானங்களின் வருகை இன்று ரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது...

நாளை மறுநாளுக்குள் விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என்று இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது... விமான நேர அட்டவணைகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளது...

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது... காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடைபெற்று வருகிறது...

கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரத்தில் சக மாணவர்கள் தாக்கியதில் +2 மாணவன் உயிரிழந்த சம்பவம்... பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார்...

சிவகங்கையில் சமூக நலத்துறையின் அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து 3 சிறுமிகள் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... காப்பகத்தின் பொறுப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...


திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு அருகே மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் எல்பிஜி டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது... எரிவாயு ஏற்றிக்கொண்டு கடப்பா நோக்கி சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...

சென்னை ரிப்பன் மாளிகை முன் போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்களிடம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கு போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது...

கேரளாவில் கடந்த 2017ஆம் ஆண்டு காரில் சென்ற நடிகைக்கு ஒரு கும்பல் பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கு...இதில் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நடிகர் திலீல் மீதான வழக்கில் எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது...

கோவா நைட் கிளப் தீ விபத்து தொடர்பாக மேலாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்... நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு 6 நாள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது...

பஞ்சாபில் முதல்வர் பதவிக்கு 500 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும், அந்தப் பணம் எங்களிடம் இல்லை... சித்துவின் மனைவியும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நவ்ஜோத் கவுர் கூறிய கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது...

விமான சேவை பாதிப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் முரளிதர் மொகோல் தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பு மோசடி குறித்து தமிழக டிஜிபி, தமிழக தலைமைச் செயலாளருக்கு அமலாக்கத்துறை 2வது முறையாக கடிதம் அனுப்பியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்