Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (21.12.2025) | 1 PM Headlines | ThanthiTV
- வருகிற வெள்ளிக்கிழமை முதல் நாடு முழுவதும் 215 கிலோ மீட்டருக்கு மேல் செல்லும் ரயில்களில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.கிலோ மீட்டருக்கு ஒரு பைசா வீதம் கட்டணம் உயர்த்தப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
- நெல்லை மாவட்டம் களக்காடு நகராட்சியில் கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கப்படும் என நெல்லையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.மானூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,, மணிமுத்தாறு அணையில் சாகச சுற்றுலா திட்டம் உள்ளிட்ட திட்டங்களையும் முதலமைச்சர் அறிவித்தார்.
- தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் தொடர்கிறது என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.புதுச்சேரியில் NDA கூட்டணி ஆட்சிதான் நடைபெறுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
- ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி பகல் பத்து 2ம் நாள் உற்சவத்தில் முத்து பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்.ரங்கா ரங்கா என பக்தி பரவசத்துடன் பக்தர்கள் வழிபட்டனர்
- மாமல்லபுரம் நட்சத்திர விடுதியில் தவெக சார்பில் நாளை சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற உள்ளது.விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை விஜய் வழங்க உள்ளார்.
Next Story
