Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (30.01.2026) | 1PM Headlines | ThanthiTV

x
  • மகாத்மா காந்தியின் நினைவுதினத்தை ஒட்டி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினர்.......குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மற்றும் மத்திய அமைச்சர்களும் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்....
  • வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு இன்னும் 15 நாட்களில் வண்ண புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 16 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்..
  • சென்னையில் மாடுகளுக்கு மைக்ரோசிப் பொருத்துவது கட்டாயம் என்று மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது...மார்ச் 18-ஆம் தேதிக்குள் 100 ரூபாய் கட்டணம் செலுதி, மைக்ரோசிப் பொருத்த வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது...
  • மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் பலியானது தொடர்பாக இரண்டாவது நாளாக தடயவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்துகின்றனர்....பாராமதியில் விபத்து நடந்த இடத்தில் விமானத்தின் பாகங்களை சேகரித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது...
  • நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் பங்கேற்க கேரளா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்....திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் இந்திய அணி வீரர்கள் சாமி தரிசனம் செய்தனர்...

Next Story

மேலும் செய்திகள்