Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (28.12.2025) | 1PM Headlines | ThanthiTV
- மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னையில் அமைதி பேரணி நடைபெற்றது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் வரை அமைதி பேரணி சென்ற பிரேமலதா, விஜயகாந்த் சிலைக்கு மாலை அணிவித்து கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். அவருடன் குடும்பத்தினரும் மரியாதை செலுத்தினர்.
- ஏழை மக்கள் மீது பெரும் பரிவு கொண்டவர் விஜயகாந்த் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அனைவருக்கும் உதவும் உயர்ந்த உள்ளத்தால், அளவில்லாத அன்பை பெற்றவர் விஜயகாந்த் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
- சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.அவருடன் இணைந்து அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
- சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.அவருடன் இணைந்து அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
- விஜயகாந்த் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.அவருடன் இணைந்து அதிமுகவினரும் அஞ்சலி செலுத்தினர்.
- மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நினைவு தினத்தையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
- விஜயகாந்த் வாழ்க்கை அனைவருக்கும் முன்னுதாரணம் என அஞ்சலி செலுத்திய பிறகு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், உள்ளிட்டோரும் புகழாரம் சூட்டியுள்ளனர்.
- தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் இன்றும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன...சிறப்பு முகாமில் பங்கேற்று பொதுமக்கள் விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர்.
- மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் விஜயகாந்த் என தவெக தலைவர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார். புரட்சிக் கலைஞர் விஜயகாந்திற்கு புகழஞ்சலி என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
- கர்நாடகா மாநிலம் கார்வார் கடற்படை தளத்திற்கு சென்ற குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நீர்மூழ்கி கப்பலில் பயணம் மேற்கொண்டார்.அப்துல் கலாமிற்க்கு பிறகு நீர்மூழ்கி கப்பலில் பயணித்த 2வது குடியரசு தலைவர் என்ற பெருமையை பெற்றார்.
Next Story
