Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (26.12.2025) | 1PM Headlines | ThanthiTV
- திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா, சந்தனக்கூடு விழாவிற்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது...மலை மீது ஆடு, கோழி பலியிட தடைகோரிய மனுவுக்கு, தர்கா நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது...
- 2026 ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 20 ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்...ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்குகிறது...
- தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது...ஒரு கிராம் தங்கம் 12 ஆயிரத்து 890-க்கு விற்பனையாகிறது...
- வெள்ளி விலை ஒரே நாளில் கிலோவிற்கு 9,000 உயர்ந்து 2 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது...ஒரு கிராம் வெள்ளி 254 ரூபாய்க்கு விற்பனையாகிறது...
- கேரளாவின் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி...பறவை காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து கையிருப்பில் உள்ளதால் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது...
- சென்னையில் சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு டி.பி.ஐ. வளாகத்தை முற்றுகையிட முயன்ற இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்...கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஆங்காங்கே கைது செய்யப்பட்டதால் பரபரப்பு நிலவியது....
- சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு பெறுவதற்கான அவகாசத்தை நீட்டித்து கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது...வரும் 28-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..
- பாமகவில் இருந்து ஜி.கே.மணியை நீக்குவதாக, அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்...கட்சியின் நலனுக்கும், கட்சி தலைமைக்கும் எதிராக செயல்படுவதாக கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது...
- பொங்கலுக்குள் ஆயிரம் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்...செவிலியர்களின் கோரிக்கை முன்னுரிமை அளித்து தீர்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்..
Next Story
