Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.10.2025) | 1 PM Headlines | ThanthiTV

x
  • தமிழகத்தில் களைகட்டும் தீபாவளி பண்டிகை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் களைகட்டியது... சென்னை, திருச்சி உள்ளிட்ட மாநகரங்களில் பொதுமக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்....
  • தீபாவளி - இறைச்சி கடைகளில் குவிந்த அசைவ பிரியர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தின் பல இடங்களில் உள்ள இறைச்சி கடைகளில் அசைவ பிரியர்கள் குவிந்தனர்.... ஒரு கிலோ மட்டன் ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது...
  • தீபாவளி - கோவில்களில் சிறப்பு வழிபாடு தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது...குடும்பத்தோடு கோவிலுக்கு வந்த பக்தர்கள், சாமி தரிசனம் செய்தனர்...
  • தீபாவளி - அக்.22ல் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் நெல்லை - சென்னை எழும்பூர் இடையே வருகிற 22 ஆம் தேதி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது....தீபாவளி கொண்டாட சொந்த ஊர் சென்ற மக்கள், சென்னை திரும்ப ஏதுவாக நடவடிக்கை என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது....
  • பயணிகள் வருகை குறைவு - 6 சிறப்பு ரயில்கள் ரத்து தமிழகத்தில் வருகிற 22, 23 , 24 , 26 ஆகிய நாட்களில் இயக்கப்பட இருந்து ஆறு சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன....செங்கல்பட்டு - நெல்லை, சென்ட்ரல் - கோட்டயம்,நாகர்கோவில் - சென்ட்ரல் இடையேயான சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்