Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (06.12.2025) | 1 PM Headlines | ThanthiTV
- கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கும் திட்டத்தை வரும்19ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்... பிப்ரவரி வரை 3 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு லேப்டாப் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது...
- இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்ட நிலையில், சென்னையில் எர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் உள்ளிட்ட விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது...கோவைக்கு 5 ஆயிரத்து 400 ரூபாயாக கட்டணம் 57 ஆயிரம் ரூபாயாகவும், பெங்களூருவுக்கு 6 ஆயிரம் ரூபாயாக இருந்த கட்டணம் 18 ஆயிரத்து 200 ரூபாயாக உயர்ந்துள்ளது...
- திருப்பரங்குன்றத்தில் முருகனை வைத்து அரசியல் செய்ய பார்க்கிறார்கள் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்...மலைகளில் கல்குவாரி உருவாக்கி அழிக்கும் போது யாரும் வரவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்...
- டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு அத்தியாவசிய நிவாரண உதவி பொருட்களுடன் சென்னையில் இருந்து புறப்படும் கப்பல்... சர்க்கரை, பருப்புகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அடங்கிய கப்பலில் ஏறி பார்வையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், கப்பலை கொடியசைத்து அனுப்பி வைத்தார்...
- தமிழகத்தில் பிரிவினை சக்திகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என, அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்...
Next Story
