Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (04.01.2026) | 1 PM Headlines | ThanthiTV
- அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.பொங்கல் திருநாளுக்கு முன்பாக ரொக்கப் பரிசு, பொங்கல் பரிசுத் தொகுப்பு, வேட்டி, சேலைகள், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார்...புதுக்கோட்டையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரசார நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், 5 ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் பொங்கல் விழாவிலும் பங்கேற்க உள்ளார்..
- தவெகவில் எத்தனை பேர் இணைவார்கள் என்பதை அறிய பொங்கல் வரை பொறுத்திருங்கள் என செங்கோட்டையன் கூறியுள்ளார்.ஓபிஎஸ், டிடிவி தினகரன் தவெக கூட்டணியில் இணைவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
- கர்நாடக மாநிலம் எல்லாபுரை பகுதியில் திருமணத்திற்கு மறுத்த பெண்ணை, பள்ளிக்கால நண்பர் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சம்பவத்தில் ஈடுபட்ட மாற்று சமூக நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
- அமெரிக்க தாக்குதலில் வெனிசுலா ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என 40 பேர் பலியானதாக வெனிசுலா மூத்த அதிகாரி கூறியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.அமெரிக்க வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Next Story
