Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (02.01.2026) | 1 PM Headlines | Thanthi TV

x
  • ஜம்மு காஷ்மீரின் சோனாமார்க் பள்ளத்தாக்கில் பனிப்பொழிவு...வெண் போர்வை போர்த்தியைப்போல் காட்சியளிக்கும் மலைகளின் ரம்மியமான காட்சிகள் வெளியானது....
  • உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது..விநாயகர், முருகர், நடராஜர், சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தனித் தனி தேர்களில் வீதி உலா வந்த தேரினை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் வழிபட்டனர்...
  • திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் திமுக பிரமுகர் குடும்பத்துடன் தீ வைத்து எரித்து கொலை...கீற்று கொட்டகையில் மனைவியுடன் இருந்தவரை வெளியே பூட்டிவிட்டு தீ வைத்து கொளுத்திய நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை...
  • கீழ்ப்பாக்கத்தில் உள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனின் வீட்டை முற்றுகையிட முயன்ற தூய்மைப் பணியாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது..தூய்மை பணியாளர்கள் - காவலர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது...
  • நாட்டில் சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்...மதவாத அரசியல் போதை, தமிழ்நாட்டிற்குள் நுழைய விடாமல் நாம் செயல்பட வேண்டும் என்றும் அவர் சூளுரைத்துள்ளார்...
  • மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடை பயணத்தினை திருச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்...
  • மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் அதி கனமழை கொட்டித்தீர்த்தது...தமிழகத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 26 செ.மீ மழையும், தென்காசி கடனா அணை பகுதியில் 24 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது...திருச்சியில் இருந்து மதுரை வரை வைகோ நடைபயணம் மேற்கொள்கிறார்...

Next Story

மேலும் செய்திகள்