இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (09.08.2025) ThanthiTV
மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டம்... பொதுக்குழு மேடையில் பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஒதுக்கப்பட்ட தனி இருக்கை...
2026 ஆகஸ்ட் வரை தலைவர், பொருளாளர், பொதுச்செயலாளர் ஆகியோர் தங்களது பதவிகளில் நீடிப்பார்கள்... மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றம்...
ராமதாஸை சுற்றி இருக்கும் சில சுயநலவாதிகள், தீய சக்திகள்தான் பிரச்சினைகளுக்கு காரணம் என அன்புமணி விமர்சனம்... பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்த தீர்ப்பில் தனக்கு மகிழ்ச்சி இல்லை, வலியோடுதான் அதை பார்த்ததாகவும் பேச்சு...
நான் தூங்கி பல நாட்களாகின்றன, பல பாரங்களை தாங்கிக் கொண்டுதான் இருக்கிறேன் என அன்புமணி உருக்கம்.. ஒரு கண் மட்டும் போதும் என்று சொல்வீர்களா?, 2 கண்களும் வேண்டும் என்றும் பேச்சு..
ராமதாஸுக்கு நிரந்தரமான நாற்காலி உள்ளதாக அன்புமணி திட்டவட்டம்... சாமிக்கு நம்மால் முடிந்த வழிபாட்டை செய்கிறோம், ஆனால் பூசாரி தடை செய்கிறார் எனவும் பேச்சு...
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்தது...சவரன் 75 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை...
பாஸ்பர சம்மதத்துடன் பாலியல் உறவு மேற்கொள்வதற்கான வயது வரம்பு, 18 ஆகவே தொடர வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்... இளம் பருவ காதலென்ற போர்வையில் விதிவிலக்களிப்பது சட்டப்படி நியாயமற்றது, ஆபத்தானது எனவும் கருத்து...
கேரள மாநிலம் பாலக்காடு அருகே ஆற்றில் குளித்த தமிழக மாணவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு... கோவை மற்றும் நெய்வேலியை சேர்ந்த 2 மாணவர்கள் உயிரிழந்த சோகம்...
சென்னை சூளைமேட்டில் மகனை கொலை செய்ததாக, தாய் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவத்தில் திடீர் திருப்பம்.. தனது இளைய மகனை, மூத்த மகன் கொலை செய்த நிலையில், அவரை காப்பாற்றுவதற்காக சரணடைந்தது விசாரணையில் கண்டுபிடிப்பு...
சென்னையில் மக்களை அச்சுறுத்தும் ராட்வீலர் போன்ற ஆக்ரோஷமான நாய்களை முறைப்படுத்த கோரிய வழக்கில் தலைமை கால்நடை அதிகாரி ஆஜராக உத்தரவு... நாய் கடி சம்பவங்களை கட்டுப்படுத்துவது குறித்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி உறுதி...
விருதுநகர் அருகே, வீட்டில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம்... வீட்டின் உரிமையாளர் பொண்ணுப்பாண்டியை கைது செய்து போலீசார் விசாரணை...
சென்னையில் துண்டு போட்டு லஞ்சம் வாங்கிய போக்குவரத்து காவலர் மீது நடவடிக்கை...அடையாறு மேம்பாலம் அருகே வாகனங்களை நிறுத்தி, எந்த விவரமும் இல்லாத ரசீதை கொடுத்து, லஞ்சம் வாங்கிய நிலையில் அதிரடி...
நெல்லை, இரும்பு பட்டறைகளில் விவசாய பயன்பாட்டு ஆயுதங்களை தவிர அபாயகர அரிவாள், கத்தி தயாரிக்க தடை.. ஆயுதங்கள் தயாரிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை...
