மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06.08.2025) | 6 PM Headlines | ThanthiTV

x

வரும் 31ஆம் தேதி அரசு முறை பயணமாக சீனா செல்கிறார், பிரதமர் மோடி... இறக்குமதி வரி விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவை எச்சரித்து வரும் நிலையில் திடீர் அறிவிப்பு...

அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுக்கும் மிரட்டலை எதிர்க்க முடியாத நிலையில் இருக்கிறார் பிரதமர் மோடி... மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடும் விமர்சனம்...

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தந்தை, மகன் சண்டையை தடுக்க முயற்சித்த சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேல்... ஆத்திரத்தில் இருந்த மகன், தனது தம்பியுடன் சேர்ந்து சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேலை வெட்டிக்கொன்றதாக தகவல்...

உடுமலை அருகே சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கு... திருப்பூர் எஸ்.பி. அலுவலகத்தில் சரணடைய வந்த தந்தை, மகனை கைது செய்த போலீசார்... மூன்றாவது நபரான மணிகண்டன் என்பவருக்கு போலீஸ் வலைவீச்சு...

உடுமலை அருகே வெட்டிக்கொல்லப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேலின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்... ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கவும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் உத்தரவு...


சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேல் படுகொலை, காவல் நிலையத்தில் இளைஞர் தற்கொலை ஆகிய சம்பவங்களுக்கு எதிர்கட்சி தலைவர் ஈபிஎஸ் கண்டனம்... காவல் நிலையத்தில் கூட இல்லாத சட்டம் ஒழுங்கிற்கு முதல்வர் என்ன பதில் வைத்துள்ளார்? எனவும் கேள்வி...

உடுமலை அருகே வெட்டிக் கொல்லப்பட்ட எஸ்.எஸ்.ஐ. சண்முக வேல் உடலுக்கு, டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் அஞ்சலி... இறுதி சடங்கில் பல்வேறு காவல் உயர் அதிகாரிகளும் பங்கேற்பு...

உடுமலை அருகே SSI சண்முகவேல் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி செந்தில்குமார் உள்ளிட்டோர் ஆய்வு... திருப்பூர் மாவட்ட எஸ்.பி யாதவ் கிரிஸ் அசோக்கும் நேரில் விசாரணை...

உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடங்களில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆய்வு... பேரிடர் மீட்பு குழுவினர் மூலம் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவு....

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில், சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது திடீரென உருண்டு வந்து விழுந்த பாறைகள்... அதிர்ஷ்டவசமாக அனைவரும் சிறு காயங்களுடன் உயிர்தப்பியதாக தகவல்...

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டம்... இந்த ஆண்டில், மத்திய அரசு 3 ஆயிரம் கோடி ரூபாய் நிதி விடுவித்திருப்பதாக ஆர்டிஐ மூலம் தகவல்...

ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதமான ரெப்போ ரேட்டில் மாற்றம் இல்லை... வட்டி விகிதம் 5 புள்ளி 5 சதவீதமாகவே தொடரும் என, ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு...

கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் காலியாக உள்ள 2 ஆயிரம் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு... கூட்டுறவு துறையின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் மாவட்ட வாரியாக அறிவிப்பு வெளியீடு...


Next Story

மேலும் செய்திகள்