இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (04.08.2025) ThanthiTV
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக, எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு... 3 வாரங்கள் ஆகியும் ஒரு மசோதா கூட நிறைவேற்றப்படவில்லை என சபாநாயகர் அதிருப்தி...
டெல்லில் காலமான ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி... பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தி, ஹேமந்த் சோரனுக்கு ஆறுதல் கூறினார்...
மறைந்த ஷிபு சோரனுக்கு மாநிலங்களவையில் இரங்கல்... அவை மரபு படி மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு...
காஷ்மீரின் குல்காம் பகுதியில் 4வது நாளாக தொடரும் ஆபரேஷன் அகல்... மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை... தொடரும் தேடுதல் வேட்டை...
தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தை திறந்து வைத்து, கார் விற்பனையை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்... தமிழகம்தான் மின்சார வாகனங்களின் தலைநகரம் என பெருமிதம்...
காங்கிரஸ், திமுக கூட்டணியில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு... நெல்லையில் கொட்டும் மழையில் தொண்டர்கள் மத்தியில் ஆவேசப் பேச்சு...
மதுரையில் 25ம் தேதி நடைபெற இருந்த த.வெ.க.வின் 2வது மாநில மாநாடு தேதி மாற்றம்..... எந்த தேதி என்பதை விஜய் அறிவிப்பார் என பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பேட்டி....
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வரும் 17ம் தேதி முதல் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம்... நெல்லையில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்க முடிவு...
PSLV-C61 ராக்கெட் தோல்வி குறித்து, விரைவில் பிரதமருக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அறிக்கை அளிக்கப்படும்... இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தகவல்...
இங்கிலாந்துக்கு எதிராக ஓவலில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில், 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி... இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, 2-2 கணக்கில் சமன் செய்தது இந்தியா...
பரபரப்பான இறுதி நாள் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி நம்பிக்கை நாயகனாக ஜொலித்த சிராஜ்... தொடரில் அதிகபட்சமாக 23 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரம்...
தெலுங்கில் ராஜமௌலி எப்படியோ, அதே மாதிரிதான் தமிழில் லோகேஷ் கனகராஜ் என்று ரஜினிகாந்த் புகழாரம்... 'கூலி' படத்தில் சைமன் என்ற கதாபாத்திரத்தில் நாகர்ஜுனா அபாரமாக நடித்துள்ளதாகவும் பாராட்டு...
சென்னையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டபுள் டக்கர் பேருந்து சேவை... நடப்பாண்டு இறுதிக்குள் டபுள் டக்கர் மின்சார பேருந்துகளை இயக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு...
