மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (04.08.2025) ThanthiTV

x

திருப்பத்தூரில் பள்ளி மாணவன் முகிலன் மரண சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நீதி கேட்டு, மாணவனின் உறவினர்கள் திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் முதல்முறையாக நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு.... 49 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவகையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து...

தி.மு.க அரசிடம் போதிய பணமில்லாததால் பயிர்க்கடன் வழங்க விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்... நெல்லையில் விவசாயிகளுடன் கலந்துரையாடிய அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வரும் 17ம் தேதி முதல் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம்... நெல்லையில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்க முடிவு...

மதுரையில் வரும் 25ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தவெக 2வது மாநில மாநாடு... விநாயகர் சதுர்த்தி நெருங்குவதால், 21ம் தேதியே மாநாட்டை நடத்த காவல்துறை அறிவுறுத்தல்...

'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் முதல்வரின் பெயரை பயன்படுத்த அனுமதி கோரி, தமிழ்நாடு அரசு மேல் முறையீடு... நாளை மறுதினம் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்...

சென்னையில், பீப் பிரியாணி சாப்பிட்ட இளைஞருக்கு வாந்தி மயக்கம்... உடல் முழுவதும் அலர்ஜியும் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி...

நாகையில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கும்போது, நடைமேடைக்கும் தண்டவாளத்திற்கும் இடையே விழுந்த பெண்ணால் பரபரப்பு... துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய ரயில்வே போலீசார்...

டெல்லியில் நடைபயிற்சியின் போது மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி சுதாவிடம் தங்கச் சங்கிலி பறிப்பு... கொள்ளையனை விரைவாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சுதா கடிதம்...

நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்பி சுதா குற்றச்சாட்டு... செயின் பறித்த வேகத்தில் கழுத்து இறுக்கப்பட்டிருந்தால் உயிரிழந்திருப்பேன் எனவும் வேதனை...

டெல்லியில் பாதுகாப்பு மிகுந்த இடத்தில் தமிழக பெண் எம்பி சுதாவிடம் செயின் பறிக்கப்பட்டிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது... முறையான கவனம் செலுத்தி பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என பிரியங்கா காந்தி வேண்டுகோள்...

டெல்லில் காலமான ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி... பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தி, ஹேமந்த் சோரனுக்கு ஆறுதல் கூறினார்...


Next Story

மேலும் செய்திகள்