காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (02.08.2025) | ThanthiTV
2023ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு... ஹரிஸ் கல்யாண் நடிப்பில் வெளியான பார்க்கிங் படத்திற்கு சிறந்த தமிழ் படம் உட்பட 3 தேசிய விருதுகள் அறிவிப்பு..
பார்க்கிங் படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது... சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை வென்றார் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன்...
சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது வாத்தி படத்திற்காக, ஜி.வி.பிரகாஷ்-க்கு அறிவிப்பு... ஏற்கனவே சூரரைப்போற்று படத்திற்கு தேசிய விருது வாங்கியுள்ள நிலையில், மேலும் ஒரு விருது...
ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிப்பு...மலையாளத்தில் வெளியான உள்ளொழுக்கு படத்திற்காக ஊர்வசிக்கு தேசிய விருது...
சிறந்த நடிகருக்கான தேசிய விருது, ஷாருக்கான் மற்றும் 12th Fail பட நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி-க்கு பகிர்ந்தளிப்பு... அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் படத்திற்காக ஷாருக்கானுக்கு தேசிய விருது...
தேசிய விருது கிடைத்தது குறித்து நடிகர் ஷாருக்கான் வீடியோ பதிவு... படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்ட நிலையில், கையில் கட்டுடன் தோன்றும் வீடியோவில் ரசிகர்களுக்கு நன்றி கூறி நெகிழ்ச்சி...
சிறந்த நடிகைக்கான தேசிய விருது ராணி முகர்ஜிக்கு அறிவிப்பு... 'சாட்டர்ஜி vs நோர்வே' படத்திற்காக ராணி முகர்ஜிக்கு தேசிய விருது...
12th fail படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிப்பு.. வறுமையில் இருந்து ஐ.பி.எஸ் அதிகாரியாக உயர்ந்த மனோஜ் குமார் சர்மாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் "12th fail" ...
பாலையா நடிப்பில் வெளியான 'பகவந்த் கேசரி' திரைப்படம் சிறந்த தெலுங்கு படமாக அறிவிப்பு... பாலையா படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் உற்சாகம்...
தி கேரளா ஸ்டோரி படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிப்பு... சிறந்த இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவுக்காக கேரளா ஸ்டோரி படத்திற்கு தேசிய விருது...
Non-Feature Film பிரிவில் தமிழில் வெளியான 'லிட்டில் விங்க்ஸ்' குறும்படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருது... ஆங்கிலத்தில் வெளியான 'தி டைம் லஸ் தமிழ்நாடு' என்ற ஆவண படத்திற்கு சிறந்த கலை, கலாச்சார படத்திற்கான தேசிய விருது...
தேசிய விருது வென்றதை நம்ப முடியவில்லை என பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் மகிழ்ச்சி... படத்திற்கு திரைக்கதைதான் மிக முக்கியம் என கருத்து...
