மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (02.08.2025) ThanthiTV
மகாராஷ்டிரா தேர்தல் உள்பட பல தேர்தல்களில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றச்சாட்டு... தேர்தல் முறைகேடுகளை கடந்த 6 மாத காலமாக தீவிரமாக ஆய்வு செய்து வருவதாகவும் பேச்சு...
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்... மாநிலம் முழுவதும் ஆயிரத்து 256 இடங்களில் மருத்துவ முகாம் அமைப்பு...
நான் நன்றாக உள்ளேன்...நீங்கள் நலமா? என விசாரித்த முதல்வர் ஸ்டாலின்... மக்களை சந்திப்பது தான் எனக்கு உற்சாகம் என பேச்சு..
தங்களின் குடும்ப உறுப்பினர்களை போல் நோயாளிகளை அக்கறையோடு கவனித்து கொள்ள வேண்டும்.... நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் தொடக்க விழாவில் மருத்துவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை...
ஓபிஎஸ், பிரேமலதா, ராமதாஸ் ஆகியோரை தி.மு.க கூட்டணியில் சேர்ப்பது குறித்து முதல்வர் முடிவு செய்வார்... மூவரும் முதல்வரை சந்தித்ததில் அரசியல் நோக்கம் இல்லை என அமைச்சர் ரகுபதி விளக்கம்...
முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் வரும் 18ஆம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவிப்பு...பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகளில் வரும் 11ஆம் தேதி வகுப்புகள் தொடங்க முடிவு...
கோவை மாவட்டம் எலச்சிபாளையம் அரசு பள்ளி மாணவர்கள் புத்தகப்பையில் குட்கா இருந்ததால் அதிர்ச்சி... மளிகை கடை மற்றும் பாழடைந்த கட்டிடத்தில் இருந்து 141 கிலோ குட்கா பறிமுதல்....
திருப்பூர் அருகே வனத்துறை அலுவலகத்தில் கைதி தற்கொலை செய்து கொண்ட விவகாரம்... உடுமலை வனத்துறை அதிகாரிகள் இரண்டு பேர் சஸ்பெண்ட்...
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நான்கு சவரன் தங்க நகைக்காக மூதாட்டி கொடூர கொலை... மாட்டு வியாபாரியை கைது செய்த சங்ககிரி காவல்துறை...
தூத்துக்குடி மாவட்டம் பண்டுகரை பகுதியில் அண்ணன், தம்பி கொன்று புதைக்கப்பட்ட சம்பவம்... 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தும் காவல்துறை...
சேலம் அருகே தனியார் சொகுசு பேருந்தில் சிறுமிக்கு ஓட்டுநர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார்... பேருந்தின் ஓட்டுநரை விழுப்புரத்தில் கைது செய்த காவல்துறை...
கோவையிலிருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 26.40 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல்... பிடிபட்டது ஹவாலா பணமா? என இருவரிடம் போலீசார் விசாரணை....
