காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (01.09.2025) ThanthiTV

x

சீனாவின் தியான்ஜின் நகரில் 2வது நாளாக நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு... ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங்-கை பிரதமர் மோடி சந்தித்தார்...

வேர்களை மறக்காத ஜெர்மனி நாட்டுத் தமிழ் உறவுகள் அளித்த வரவேற்பின் ஆரவாரத்தில் அகம் குளிர்ந்ததாக முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்... தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள், முதலீட்டாளர்களை அழைத்து வாருங்கள் என அழைப்பு விடுத்தார்...

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர்களின் விலை நள்ளிரவு முதல் 51 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டது... வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலையில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது...

மூலப்பொருட்கள் விலை உயர்வு எதிரொலியால், சென்னையின் பல்வேறு பகுதிகளில், டீக்கடைகளில் நள்ளிரவு முதல் டீ, காபி விலை உயர்த்தப்பட்டது...ஒரு Tea 15 ரூபாயாகவும், காஃபி 20 ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது...

தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் சுங்க‌க் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த‌து... ஒருமுறை கட்டணம் 5 ரூபாய் முதல் 45 ரூபாய் வரையிலும், இருமுறை கட்டணம் 65 ரூபாய் வரை உயர்ந்துள்ளது...


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது... இடி மின்னலுடன் கூடிய சூறாவளி காற்று 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.....

சென்னை ஆவடி அருகே விஷப்பூச்சி கடித்து இளம்பெண் உயிரிழந்தார்... ஆவடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கோவை அருகே முறையான ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 22 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.... பறிமுதல் பணத்தை வருவாய் வரித்துறையிடம் ஒப்படைத்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்....

நெல்லை- எழும்பூர் இடையே இயக்கப்படும் வந்தேபாரத் ரயிலில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது... 16 பெட்டிகளில் இருந்து 20 பெட்டிகளாக உயர்த்தி இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் அறிவித்தனர்...

ஈபிஎஸ் முதுகில் குத்திவிட்டார் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்... ஈபிஎஸ் கூட்டங்களுக்கு காசு கொடுத்துதான் ஆட்களை சேர்க்கிறார்கள் என்றும் விமர்சித்துள்ளார்...

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 2 நாள் பயணமாக நாளை தமிழகம் வருகிறார்... சென்னையில் சிட்டி யூனியன் வங்கியின் 125ஆவது ஆண்டு விழாவிலும், திருவாரூரில் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் பங்கேற்கிறார்...


Next Story

மேலும் செய்திகள்