மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (01.09.2025) ThanthiTV
சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு 2வது நாளாக நடைபெற்றது... ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங்-கை பிரதமர் மோடி சந்தித்தார்...
நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு எல்லையில் அமைதி அவசியம் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்... சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்....
தீவிரவாதம் ஒரு நாட்டிற்கு மட்டுமல்ல மனித குலத்திற்கே சவாலானது.... சில நாடுகள் பயங்கரவாதத்திற்கு வெளிப்படையாக ஆதரவளிப்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்...
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டிப்பதாக ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கூட்டு தீர்மானம் நிறைவேற்றம்... பாகிஸ்தான் முன்னிலையிலேயே உறுப்பு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன
சீனாவின் தியான்ஜின் நகரில் ரஷ்ய அதிபர் புதினை, பிரதமர் மோடி சந்தித்தார்... இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில் முக்கிய ஆலோசனை...
இந்தியா-ரஷ்யா உறவு புதிய உச்சத்தை அடைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்....ரஷ்யா உடனான உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வோம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்..
அமெரிக்கா - இந்தியா இடையிலான கூட்டாண்மை புதிய உயரங்களை எட்டுகிறது... 21ஆம் நூற்றாண்டை வரையறுக்கும் உறவு இது என அமெரிக்க தூதரகம் சுவாரசிய பதிவு...
வேர்களை மறக்காத ஜெர்மனி நாட்டுத் தமிழ் உறவுகள் அளித்த வரவேற்பின் ஆரவாரத்தில் அகம் குளிர்ந்ததாக முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்... தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள், முதலீட்டாளர்களை அழைத்து வாருங்கள் என அழைப்பு விடுத்தார்...
வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர்களின் விலை நள்ளிரவு முதல் 51 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டது... வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலையில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது...
மூலப்பொருட்கள் விலை உயர்வு எதிரொலியால், சென்னையின் பல்வேறு பகுதிகளில், டீக்கடைகளில் நள்ளிரவு முதல் டீ, காபி விலை உயர்த்தப்பட்டது... ஒரு Tea 15 ரூபாயாகவும், காஃபி 20 ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது...
