Today Headline | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (11-12-2025) | 11AM Headlines | Thanthi TV
- தஞ்சையில் பயணிகளை ஏற்றுவது தொடர்பாக, தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் இடையே வாக்குவாதம் ...தனியார் பேருந்தை, அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் சிறைபிடித்ததால் பயணிகள் அவதி அடைந்தனர்...
- கோவை அடுத்த கீரணத்தம் பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது...யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்...
- திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆட்டோ ஓட்டுநர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம்...பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் கொலை செய்த நிலையில், 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்...
- செம்பரம்பாக்கம் ஏரியில் முழு கொள்ளளவான 24 அடி நீரைத் தேக்கி, ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்...மதகுகள், ஏரிக்கரைகள் பலத்தை ஆய்வு செய்து, முழு கொள்ளளவில் நீரை தேக்கி வைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்...
- மலேசியாவில் நடைபெறும் ஆசியன் லீ மேன்ஸ் கார் ரேஸ் சீரியசில் நடிகர் அஜித்குமாருடன் F1 வீரர் நரேன் கார்த்திகேயன் பங்கேற்க உள்ளார்...பயிற்சி மற்றும் தகுதி சுற்று போட்டிகள் நாளை மறுநாள் தொடங்குகிறது...
Next Story
