Today Headline | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (27-12-2025) | 11AM Headlines | Thanthi TV

x
  • ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 1 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது.ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • வெள்ளி விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது.கிலோவிற்கு 20 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது.
  • S.I.R பணிகளை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து வாக்கு சாவடிகளிலும் இன்று வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தம் மேற்கொள்ளவும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது...
  • திருவண்ணாமலையில் மாநில அளவிலான வேளாண் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.200க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் கண்காட்சியை முதலமைச்சர் பார்வையிட்டார்.
  • சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்போம் என அன்புமணி கூறியுள்ளார்.ஆன்மிகத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்றும் மதுரை விமான நிலையத்தில் அவர் பேட்டி அளித்தார்.
  • சிவகாசி மாவட்டம் கொங்கலாபுரத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.விபத்தில் கமலிகா, ரிஷிகா ஆகிய 2 சிறுமிகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
  • கடலூர் மாவட்டம் எழுத்தூரில் அரசு பேருந்து, கார்கள் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம்....விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
  • உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியில் தண்டவாளத்தில் 2 ஆண்கள் சடலம் மீட்கப்பட்டுள்ளது.ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தனரா அல்லது வேறு ஏதாவது காரணமா என ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
  • சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் டிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம்...போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த ஆயிரத்து 560 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • டெல்லியில் நச்சு புகை மூட்டம் சூழ்ந்து காற்று மாசு நீடிக்கிறது.வட மாநிலங்களில் பனிமூட்டம் தொடர்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
  • நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த தலைக்குந்தா, காந்தள் பகுதிகளில் 0 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது.உறைபனி தொடர்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
  • திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் நேற்று ஒரே நாளில் பக்தர்கள், 4 கோடியே 52 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தியுள்ளனர்.டோக்கன் இல்லாத இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்தனர்.
  • ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதேசி திருவிழா, பகல் பத்து உற்சவத்தின் 8ஆம் நாளில் நம்பெருமாள் ரத்தின பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளினார்...ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா ரங்கா என பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்...

Next Story

மேலும் செய்திகள்