Today Headline | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (26-12-2025) | 11AM Headlines | Thanthi TV
- தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது...ஒரு கிராம் தங்கம் 12 ஆயிரத்து 890-க்கு விற்பனையாகிறது...
- வெள்ளி விலை ஒரே நாளில் கிலோவிற்கு 9,000 உயர்ந்து 2 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது...ஒரு கிராம் வெள்ளி 254 ரூபாய்க்கு விற்பனையாகிறது...
- நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது...2ம் வகுப்பு பெட்டிகளில் 216 முதல் 750 கிலோ மீட்டர் வரையிலான பயணத்திற்கு 5 ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது...
- பாமகவில் இருந்து ஜி.கே.மணியை நீக்குவதாக, அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்...கட்சியின் நலனுக்கும், கட்சி தலைமைக்கும் எதிராக செயல்படுவதாக கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது...
- கடந்த 2004ஆம் ஆண்டு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுனாமி ஆழி பேரலையால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த துயர சம்பவத்தின் 21 ஆம் ஆண்டு நினைவு தினம்...கடலூர், நாகர்கோவில், தூத்துக்குடி, வேதாரண்ய கடற்கரையில் உறவுகளை இழந்த குடும்பத்தினர் மலர் தூவியும், பால் ஊற்றியும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்...
- சபரிமலையில் நாளை நடைபெறும் மண்டல பூஜை நிகழ்வை ஒட்டி ஐயப்பனுக்கு இன்று மாலை தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது...ஆரன்முலா பார்த்தசாரதி கோயிலில் இருந்து தங்க அங்கி கொண்டுவரப்படும் நிலையில், பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது...
- தேசிய பால புரஸ்கார் விருது விழா டெல்லியில் நடைபெற்றது...பல்வேறு துறைகளில் சிறந்த 20 குழந்தைகளுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார்...
- குஜராத்தில் உள்ள கட்ச் பகுதியில் லேசான நிலநடுக்கம்...இன்று காலை 4.30 மணிக்கு 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது...
- முன்னாள் ஐரோப்பிய யூனியன் தலைவர் தியரி பிரெட்டனுக்கு அமெரிக்க விசா வழங்க தடை விதிப்பு...அமெரிக்கா குறித்து பேசுபவர்கள் மீது தணிக்கை செய்ய தனியார் நிறுவனங்களுக்கு தியரி பிரெட்டன் அழுத்தம் கொடுத்ததாக அமெரிக்கா குற்றச்சாட்டு...
- மலேசியாவில் நடைபெறும் ஜனநாயகன் பட இசைவெளியீட்டு விழா...நாளை நடைபெறவுள்ள இசை வெளியீட்டு விழாவிற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து விஜய் புறப்பட்டார்...
Next Story
