Today Headline | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (25-12-2025) | 11AM Headlines | Thanthi TV
- கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, டெல்லியில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பிரதமர் மோடி பங்கேற்றார்...The Cathedral Church of the Redemption தேவாலயத்தில் ஆராதனை நடத்தினார்..
- கர்நாடகா மாநிலம் ஹிரியூரில் தனியார் பேருந்து தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்...கட்டுப்பாட்டை இழந்த லாரி, பேருந்து மீது மோதியதில் தீ விபத்து ஏற்பட்டது...
- டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து 8 ஆயிஅரத்து 849 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது..காவிரியில் ஆயிரத்து எட்டு கனஅடியும், வெண்ணாற்றில் 6 ஆயிரத்து 10 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது...
- ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடி ஏற்றப்பட்டது...ஜனவரி 2ஆம் தேதி ஆருத்ரா தேரோட்டமும், 3ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெற உள்ளது...
- சபரிமலையில் நாளை மறுநாள் மண்டல பூஜை நடைபெற உள்ளது...இதையொட்டி, மேளதாள கொண்டாட்டங்களுடன் காவல் துறையினரால் கற்பூற ஆழி நடைபெற்றது...
Next Story
