காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (02-08-2025) Thanthi TV

x

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிடியாக சவரனுக்கு ஆயிரத்து 120 ரூபாய் உயர்வு... ஒரு சவரன் தங்கம் 74 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை...

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்... மாநிலம் முழுவதும் ஆயிரத்து 256 இடங்களில் நடைபெறும் மருத்துவ முகாம்...

நான் நன்றாக உள்ளேன்...நீங்கள் நலமா? என விசாரித்த முதல்வர் ஸ்டாலின்... மக்களை சந்திப்பது தான் எனக்கு உற்சாகம் என பேச்சு..

தங்களின் குடும்ப உறுப்பினர்களை போல் நோயாளிகளை அக்கறையோடு கவனித்து கொள்ள வேண்டும்.... நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் தொடக்க விழாவில் மருத்துவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை...

சென்னை முகப்பேரில் உள்ள தனியார் காப்பகத்தில் மெத்தையில் இருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை உயிரிழப்பு... பால் கொடுத்துவிட்டு குழந்தையை தூங்க வைத்த போது நிகழ்ந்த துயரச் சம்பவம்...

திருப்பூர் அருகே வனத்துறை அலுவலகத்தில் கைதி தற்கொலை செய்து கொண்ட விவகாரம்... உடுலை வனத்துறை வனவர், வானக்காவலர் ஆகிய இரண்டு பேர் சஸ்பெண்ட்...

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நான்கு சவரன் தங்க நகைக்காக மூதாட்டி கொடூர கொலை... மாட்டு வியாபாரியை கைது செய்த சங்ககிரி காவல்துறை...

தூத்துக்குடி மாவட்டம் பண்டுகரை பகுதியில் அண்ணன், தம்பி கொன்று புதைக்கப்பட்ட சம்பவம்... 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தும் காவல்துறை...

குற்றாலம் அருவிகளில் சீரான கொட்டும் தண்ணீர்... வார விடுமுறை நாளில் அருவிகளில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்...

அன்புமணி தலைமையில் வருகிற 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் பா.ம.க பொதுக்குழு நடைபெறும் என அறிவிப்பு... பொதுக்குழு-வுக்கு ராமதாஸை அழைக்க அன்புமணி முடிவு செய்திருப்பதாக தகவல்...

ஜம்மு- காஷ்மீரின் குல்காம் பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள், தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை... ஆபரேஷன் அகல் நடவடிக்கையில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை...தொடரும் தேடுதல் வேட்டை...

மும்பையில் இருந்து கொல்கத்தா சென்ற விமானத்தில் சக பயணியை கன்னத்தில் அறைந்த நபரால் பரபரப்பு சம்பந்தப்பட்ட நபர் விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு..


Next Story

மேலும் செய்திகள்